/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறப்பு பருவ பயிர்களுக்கு காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு
/
சிறப்பு பருவ பயிர்களுக்கு காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு
சிறப்பு பருவ பயிர்களுக்கு காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு
சிறப்பு பருவ பயிர்களுக்கு காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : அக் 05, 2024 07:06 AM
சேலம் : சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் அறிக்கை: சேலம் மாவட்டத்தில், 2024 - 25ம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை, சேமா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. சிறப்பு பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி காப்பீடு செய்ய, வரும் 31ம், நெல்லுக்கு அடுத்த மாதம் 15ம் காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பயிர்களுக்கு கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறா விவசாயிகள், பருத்தி பயிருக்கு பயிர் காப்பீடு தொகையில், 5 சதவீதம் பிரீமிய தொகையும், இதர பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகையில், 1.5 சதவீதம் பிரீமிய தொகையும் செலுத்தி உரிய காலக்கெடுவில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
பயிர் காப்பீடு பிரீமிய தொகையாக, ஒரு ஏக்கர் நெல்லுக்கு, 550 ரூபாய், மக்காச்சோளத்துக்கு, 479, பருத்திக்கு, 635 ரூபாய் செலுத்த வேண்டும்.இதற்கு விவசாயிகள், சேமிப்பு வங்கி கணக்கு புத்தகம், ஆதார் நகல்கள், பயிர் சாகுபடி அடங்கல் விண்ணப்பம், முன்மொழிவு படிவம் ஆகியவற்றுடன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம் உரிய பிரீமிய தொகையை செலுத்தி பயிர் காப்பீடு செய்து, இயற்கை இடர்பாடு ஏற்படும் காலத்தில் உரிய காப்பீடு தொகை பெற்று பயன்பெறலாம்.
விபரம் பெற வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் அலுவலரை அணுகலாம். பயிர் காப்பீடு விபரங்களை உழவர் செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம். மேலும், 2023 - 24ல், 9,252 பயனாளிகளுக்கு, 9.02 கோடி ரூபாய் காப்பீடு தொகை விவசாயிகளுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.