/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காப்பீடு பணம் கொள்ளை; ஓய்வூதியர்கள் கொந்தளிப்பு
/
காப்பீடு பணம் கொள்ளை; ஓய்வூதியர்கள் கொந்தளிப்பு
ADDED : ஆக 07, 2024 07:40 AM
சேலம்: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் புதிய சுகாதார காப்பீடு திட்டத்தின் அனைத்து குறைபாடுகளுக்கும் தீர்வு காண வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம் பேசியதாவது: ஓய்வூதியத்தில் மாதந்தோறும் காப்பீடு தொகை, 497 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்மூலம் பணமில்லா சிகிச்சை பெறலாம் என அரசு கூறுகிறது. ஆனால் மருத்துவ சிகிச்சையின் போது காப்பீடு நிறுவனங்கள், 40 சதவீத தொகையை மட்டுமே விடுவிக்கிறது. மீதி தொகையை கேட்டால் சரியான பதில் இல்லை.இந்த விவகாரத்தில் தமிழக அரசும், காப்பீடு நிறுவனங்களும் சேர்ந்து ஓய்வூதியர்களின் பணத்தை கொள்ளை அடிப்பதால் ஓய்வூதியர்கள் கடனாளி ஆகின்றனர். அதனால் பல லட்சம் ஓய்வூதியர்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம். காப்பீடு நிறுவனங்கள், 100 சதவீத தொகையை வழங்கிட முன் வரவேண்டும். இல்லையெனில் காப்பீடு திட்டத்தை முழுமையாக அரசே ஏற்று நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.