/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அரசு பள்ளியில் இன்சூரன்ஸ் வார விழா
/
அரசு பள்ளியில் இன்சூரன்ஸ் வார விழா
ADDED : செப் 06, 2025 02:13 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், எல்.ஐ.சி.,யின், 69ம் ஆண்டு இன்சூரன்ஸ் வார விழா மற்றும் ஆசிரியர் தின விழா நேற்று முன்தினம் நடந்தது. தலைமை ஆசிரியர் செண்பகம் வரவேற்றார். எல்.ஐ.சி.,யின் சேலம் தெற்கு கிளை முதுநிலை மேலாளர் விஜய லட்சுமி, சேமிப்பின்
முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, எல்.ஐ.சி., பொன் விழா கல்வி உதவித்தொகை திட்டம், பீமா ஸ்கூல் திட்டம், பீமா சகி திட்டத்தில் கிராமப்புற பெண்களுக்கு வேலை வாய்ப்பு, ஆசிரியர்களின் சிறப்பான பணிகள் குறித்து பேசினார்.மேலும், எல்.ஐ.சி., சார்பில், 6 முதல், பிளஸ் 2 வரையான மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் உதவி கோட்ட மேலாளர் அருள்தாஸ், தெற்கு கிளை அலுவலர் சுரேஷ்பாபு, வளர்ச்சி அதிகாரி சுரேஷ்குமார், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.