/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீவிர இட்டுவைப்பு சேகரிப்பு முகாம்; அனைத்து கிளைகளில் நடத்த அறிவுரை
/
தீவிர இட்டுவைப்பு சேகரிப்பு முகாம்; அனைத்து கிளைகளில் நடத்த அறிவுரை
தீவிர இட்டுவைப்பு சேகரிப்பு முகாம்; அனைத்து கிளைகளில் நடத்த அறிவுரை
தீவிர இட்டுவைப்பு சேகரிப்பு முகாம்; அனைத்து கிளைகளில் நடத்த அறிவுரை
ADDED : ஜூலை 27, 2024 01:25 AM
சேலம்: சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர்கள் பணி திறனாய்வு கூட்டம் நடந்தது.
அதற்கு தலைமை வகித்து, வங்கி மேலாண் இயக்குனர் மீராபாய் பேசியதாவது:வங்கி மூலம், 'தீவிர இட்டுவைப்பு சேகரிப்பு' முகாம்களை அனைத்து கிளைகளிலும் நடத்த வேண்டும். மக்கள், வர்த்தக நிறு-வனங்கள், ஓய்வு பெற்ற அரசு, தனியார், அரசு சார்ந்த பணியா-ளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பயன்பெறும்படி, ஜூலை, 26 முதல், ஆக., 31 வரை, ஓராண்டுக்கு செய்யப்படும் புதிய இட்டு வைப்புகளுக்கு மட்டும், 8 சதவீத வட்டி விகிதம் சிறப்பினமாக வழங்கப்படும்.மேலும், 6 முதல், பிளஸ் 2 வரை, அரசு அதன் உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு தமி-ழக அரசு உத்தரவுப்படி, 'தமிழ் புதல்வன்' திட்டத்தில், மாதம், 1,000 ரூபாய் பெறுவதற்கு, வங்கி பணியாளர்கள், அந்த மாணவர்-களை கல்லுாரிகளில் சந்தித்து சேமிப்பு கணக்குகளை தொடங்க வேண்டும்.அனைத்து கடன் திட்ட விபரங்களை, வங்கிக்கு வரும் வாடிக்-கையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எடுத்துக்கூறி தகுதி, தேவைகளின் அடிப்படையில் கடன் வழங்கி, அவர்கள் பொரு-ளாதாரத்தை மேம்படுத்த, கிளை மேலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாய கடன் அட்டை, சேமிப்பு, நடப்பு கணக்குதாரர்களுக்கு, 'ரூபே டெபிட் கார்டு', வாடிக்கையா-ளர்களுக்கு, 'ஏடிஎம்' உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை அனை-வருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.