/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சர்வதேச மகப்பேறு செவிலியர் தினம் கோகுலம் கல்லுாரியில் கொண்டாட்டம்
/
சர்வதேச மகப்பேறு செவிலியர் தினம் கோகுலம் கல்லுாரியில் கொண்டாட்டம்
சர்வதேச மகப்பேறு செவிலியர் தினம் கோகுலம் கல்லுாரியில் கொண்டாட்டம்
சர்வதேச மகப்பேறு செவிலியர் தினம் கோகுலம் கல்லுாரியில் கொண்டாட்டம்
ADDED : மே 05, 2025 02:54 AM
சேலம்: சர்வதேச மகப்பேறு செவிலியர் தினத்தை ஒட்டி, சேலம், கோகுலம் செவிலியர் கல்லுாரியில் மாநில அளவில் கல்லுாரிகள் இடையேயான வினாடி - வினா போட்டி நடந்தது. 16 செவிலியர் கல்லுாரிகளில் இருந்து, 30 அணிகள் பங்கேற்றன. இதில், மகப்பேறு செவிலியத்துவம் குறித்த வினாக்கள் கேட்கப்பட்டன. நடுவர்களாக, டாக்டர்கள் நிவேதிதா சிவானந்தம், நளினி பங்கேற்றனர். மாணவ மாணவியர் ஆவலுடன் பங்கேற்றனர்.
இதன் நிறைவு விழாவுக்கு, கோகுலம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அர்த்தனாரி தலைமை வகித்தார். கோகுலம் செவிலியர் கல்லுாரி முதல்வர் தமிழரசி வரவேற்றார். இந்நிகழ்ச்சியின் அறிக்கையை மகப்பேறியல் செவிலியர் துறை தலைவர் கனகதுர்கா வாசித்தார். வினாடி வினா போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த, சேலம் அரசினர் செவிலியர் கல்லுாரி, கோவை கே.எம்.சி.ஹெச்., செவிலியர் கல்லுாரி, கோவை பி.எஸ்.ஜி., செவிலியர் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழா நிறைவில், கோகுலம் செவிலியர் கல்லுாரி துணை முதல்வர் காமினி சார்லஸ் நன்றி தெரிவித்தார். விழாவை, மகப்பேறியல் செவிலியர் துறையை சேர்ந்த
ஆசிரியைகள் ஏற்பாடு செய்தனர்.