/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வித்யா மந்திர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
/
வித்யா மந்திர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
வித்யா மந்திர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
வித்யா மந்திர் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்
ADDED : செப் 03, 2025 02:36 AM
சேலம், சேலம், நெய்க்காரப்பட்டியில் உள்ள ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில்,
வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மையியல் இணைந்து நடத்திய பன்னாட்டு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
அதில் எத்தியோப்பியா, ஹவாசா பல்கலை இணை பேராசிரியர் சிவகுமார் சோமசுந்தரம், பெங்களூரு பிரசிடென்சி பல்கலை இணை பேராசிரியர் ஹரிஹரன், 'இளைஞர் தொழில் முனைவோரை மாற்று வழியில் நிலையான வளர்ச்சி மற்றும் புதுமைக்கான உத்திகள் ஏற்படுத்துவது' எனும் தலைப்பில் பேசினர். சேலத்தில் உள்ள பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவியர், கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.
சிறந்த கட்டுரைகளுக்கு ஸ்ரீவித்யா மந்திர் கல்வி குழும தலைவர் கிருஷ்ண செட்டி, செயலர் ராமசாமி, கல்லுாரி செயலர் நடராஜன், முதல்வர் தனலட்சுமி ஆகியோர்
பரிசுகள் வழங்கினர். ஏற்பாட்டை வணிகவியல், மேலாண் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.