/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சர்வதேச சிலம்பம் போட்டி ஏற்காடு மாணவி அசத்தல்
/
சர்வதேச சிலம்பம் போட்டி ஏற்காடு மாணவி அசத்தல்
ADDED : நவ 26, 2024 01:30 AM
சர்வதேச சிலம்பம் போட்டி
ஏற்காடு மாணவி அசத்தல்
ஏற்காடு, நவ. 26-
மலேசியாவில் நடந்த சர்வதேச அளவிலான, சிலம்பம் போட்டியில் ஏற்காடு மாணவி சாதனை
படைத்தார்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ளது குண்டூர் கிராமம். இந்த ஊரை சேர்ந்த தோட்ட தொழிலாளி சுந்தரம், ஜானகி தம்பதியரின் மகள் அனுஷ்கா, 14. இவர், ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் யுனிட்டி ஆப் யூத் நிறுவனத்தில், சிலம்ப பயிற்சி பெற்று வந்தார்.
கோவையில் கடந்த ஆகஸ்டில் நடந்த, மாநில சிலம்பம் போட்டியில் மூன்றாம் இடத்தை பிடித்தார். அதன் மூலம் மலேசியாவில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றார். இரு தினங்களுக்கு முன், மலேசியாவில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்ற அனுஷ்கா, குத்து வரிசை, தனித்துவ சிலம்பம் போட்டி ஆகிய இரண்டு பிரிவுகளிலும் தங்கப்பதக்கம் வென்றார். பின் நடந்த குழு சிலம்பம் போட்டியிலும், தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
மூன்று தங்கப்பதக்கம் வென்ற அனுஷ்காவை, ஏற்காடு மலைக்கிராம மக்கள் பாராட்டினர். சாதனைக்கு உறுதுணையாக இருந்த விஜய், காருண்யா, சிலம்பம் மாஸ்டர் கிருஷ்ணன், கோகுல், ஷபானா ஆகியோருக்கும் மக்கள் வாழ்த்து
தெரிவித்தனர்.