/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலையில் பன்னாட்டு பயிற்சி பட்டறை
/
பெரியார் பல்கலையில் பன்னாட்டு பயிற்சி பட்டறை
ADDED : அக் 01, 2024 07:13 AM
ஓமலுார்: சேலம், பெரியார் பல்கலை உளவியல் துறை சார்பில், 'உணர்வு மேலாண்மையும் நலவாழ்வும்' தொடர்பான பன்னாட்டு பயிற்சி பட்டறை நடந்தது.
துறைத்தலைவர் கதிரவன் தலைமையில் நடந்த விழாவில், துணைவேந்தர் ஜெகநாதன் பேசுகையில்,'' மன மேலாண்மை தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் உள்ளன. அவற்றில் மனம், உடல், நலவாழ்வு பற்றிய திருமூலரின் பங்கு அளப்பரியது. நவீன வாழ்வு, பன்னாட்டு பண்பாடு கொண்டிருந்தாலும், இந்நாட்டு வாழ்வுக்கான பயிற்சி முறைமைகள் திருமந்திரத்தில் பெரும-ளவில் உள்ளது. அவற்றை தொடர்ந்து பழக்கமாக்குதல் மூலமே, நாம் அதன் பயனை அடைய இயலும்,'' என்றார்.
வள அறிஞராக அமெரிக்க உளவியல் நிபுணர் முனைவர். மேத்யூ சார்லஸ் மாட் பேரல்சன், மாணவர்களுக்கு உணர்வு மேலாண்மை தொடர்பான பயிற்சியை வழங்கினார். பேராசிரியர் முனைவர் செல்வராஜ், உளவியல் மாணவர்கள், ஆசிரியர்கள், உளவியல் நிபு-ணர்கள், ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.