தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/இடைப்பாடி ஜி.ஹெச்.,ல் பெண்ணுக்கு மீண்டும் மூட்டு மாற்று ஆப்பரேஷன்

இடைப்பாடி ஜி.ஹெச்.,ல் பெண்ணுக்கு மீண்டும் மூட்டு மாற்று ஆப்பரேஷன்

இடைப்பாடி ஜி.ஹெச்.,ல் பெண்ணுக்கு மீண்டும் மூட்டு மாற்று ஆப்பரேஷன்


ADDED : ஆக 13, 2026 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இடைப்பாடி: இடைப்பாடியில் உள்ள, தாலுகா அரசு மருத்துவமனையில், ஒரே பெண்ணுக்கு மீண்டும் அதே காலில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அசத்தியுள்ளனர்.

இதுகுறித்து, எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மருத்துவர் பாலாஜி கூறியதாவது: பூலாம்பட்டியை சேர்ந்த சகாயமேரி, 62, என்பவருக்கு, 3 ஆண்டுக்கு முன், இடைப்பாடி அரசு மருத்துவம-னையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின் கீழே விழுந்ததில் மாற்றம் செய்யப்பட்ட மூட்டு உடைந்து, நடக்க முடியாத நிலையில் இங்கு வந்தார். மீண்டும் அதே காலில், இலவசமாக உயர்தர சிகிச்சையாக மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இதேபோல் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை செய்தால், மற்ற தனியார் மருத்துவமனை-களில், 3.5 முதல், 4 லட்சம் ரூபாய் வரை ஆகும். இங்கு தமிழக முதல்வரின் காப்பீடு திட்டம் மூலம் இலவசமாக செய்-துள்ளோம். அந்த நோயாளி தற்போது நன்றாக நடந்து வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

இடைப்பாடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கோகு-லகிருஷ்ணன் கூறுகையில், ''இடைப்பாடி அரசு மருத்துவம-னையில் அனைத்து வகை அறுவை சிகிச்சைகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக செய்து வருகிறோம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us