/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மூதாட்டி இறப்பில் சந்தேகத்தால் விசாரணை
/
மூதாட்டி இறப்பில் சந்தேகத்தால் விசாரணை
ADDED : ஜூன் 05, 2025 01:17 AM
தாரமங்கலம் : தாரமங்கலம் அருகே கருக்குப்பட்டியை சேர்ந்தவர் ராஜம்மாள், 94. இவரது, 4 மகன்கள், இரு மகளுக்கு திருமணாகி தனித்தனியே வசித்தனர். இளைய மகள் பழனியம்மாள், 65. இவரது கணவர் பிரிந்து சென்றதால், ராஜம்மாளுடன் வசித்தார். ராஜம்மாளின் கணவர் பழனியப்பகவுண்டர் இறந்த நிலையில், தாயும், மகளும் வசித்தனர்.
நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு ராஜம்மாள் படுக்கையில் இறந்து கிடந்தார். பழனியம்மாள், உறவினர்களுக்கு தகவல் அளித்தார். இறுதி சடங்கு ஏற்பாடு நடந்த நிலையில், அங்கு வந்த உறவினர், மூதாட்டி தலையில் இருந்த காயத்தை பார்த்து, இறப்பில் சந்தேகம் உள்ளதாக கூறினார். தொடர்ந்து தாரமங்கலம் போலீசுக்கு தகவல் அளித்தனர். ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில் தாரமங்கலம் போலீசார், நேற்று விசாரித்தனர்.
உடலை, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர். முன்னதாக, சம்பவ இடத்தில், சேலம் எஸ்.பி., கவுதம் கோயல் விசாரித்தார்.