/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலி கூட்டுறவு சங்கம் நடத்தி பல கோடிமோசடி; சுருட்டிய கும்பல் குறித்து விசாரணை
/
போலி கூட்டுறவு சங்கம் நடத்தி பல கோடிமோசடி; சுருட்டிய கும்பல் குறித்து விசாரணை
போலி கூட்டுறவு சங்கம் நடத்தி பல கோடிமோசடி; சுருட்டிய கும்பல் குறித்து விசாரணை
போலி கூட்டுறவு சங்கம் நடத்தி பல கோடிமோசடி; சுருட்டிய கும்பல் குறித்து விசாரணை
ADDED : ஏப் 22, 2025 01:10 AM
சேலம்:சேலம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் செல்வராஜ், 35. ஜலகண்டாபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த், 34. இவர்கள் இருவரும், சேலம் பள்ளப்பட்டியில் தனியார் நிதி நிறுவனம் தொடங்கி,
அதன்மூலம், வேலை வாய்ப்பு வழங்குவதாக முகநுாலில் விளம்பரம் செய்து, பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது. புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் வழக்கு
பதிந்து, தீவிர விசாரணைக்கு பின், ஆனந்த், செல்வராஜ் ஆகிய இருவரையும், கடந்த, 16ல் கைது செய்தனர்.
அதன் மூலம், ஆனந்த் தலைமையிலான கும்பல், போலி கூட்டுறவு சங்கம் நடத்தி, பல கோடி ரூபாய் சுருட்டியது அம்பலமாகி உள்ளது. அதில் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களை
சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர், நேற்று, மாநகர் குற்றப்பிரிவில் புகார் அளித்தனர்.
அதன் விபரம் வருமாறு:
சேலம், மெய்யனுார் திருஞானசம்பந்தர் தெருவில் போலியாக, சேலம் மாவட்ட நெசவாளர் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் தொடங்கிய மோசடி கும்பல், நாமக்கல், ஈரோடு,
சத்தியமங்கலம், கோபி, திருப்பூர் உள்ளிட்ட, 11 இடங்களில் அடுத்தடுத்து, கிளை சங்கத்தை நிறுவினர். அதில் மேலாளர், கிளை மேலாளர், உதவி மேலாளர், அலுவலக உதவியாளர் என
பல்வேறு பணி வாய்ப்புகள் இருப்பதாக முகநுாலில் விளம்பரபடுத்தி ஊதியமாக, 15,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதை நம்பி விண்ணப்பித்தவர்களிடம், 3-14 லட்ச ரூபாய் வரை வைப்புதொகை பெற்று கொண்டு வேலை வழங்கப்பட்டது. பணியில் சேர்ந்த சில மாதங்களில், ஊதியம் தரவில்லை, வைப்பு
தொகையும் திருப்பி செலுத்தாமல், சாக்குபோக்கு சொல்லி காலம் கடத்தினர். ஒரு கட்டத்தில், கிளை சங்கத்தை மூடிய கும்பல், மெய்யனுாரில் உள்ள தலைமை சங்கத்தையும் மூடிவிட்டனர்.
வீடு தேடி சென்று, அவர்களிடம் வைப்பு தொகை, ஊதியத்தை கேட்டபோது, பணம் தர மறுத்து, மேச்சேரியை சேர்ந்த முருகன், 33, உள்ளிட்ட கும்பல், கொலை மிரட்டல் விடுத்தது. மொத்தம்
300க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம், 5 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதால், அப்பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
போலீசார் கூறுகையில், 'புகாரை தனி வழக்காக விசாரிப்பதா, பள்ளப்பட்டி வழக்குடன் சேர்த்து விசாரிப்பதா என்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது. போலீஸ் கமிஷனர் உத்தரவுக்கு
பின், அடுத்தகட்ட நடவடிக்கை தொடரும்' என தெரிவித்தனர்.