/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தம்பி குத்திக்கொலை அண்ணனிடம் விசாரணை
/
தம்பி குத்திக்கொலை அண்ணனிடம் விசாரணை
ADDED : அக் 20, 2024 04:27 AM
சேலம்: சேலம், இரும்பாலை, எஸ்.கொல்லப்பட்டியை சேர்ந்த வீரப்பன் மகன்கள் மாணிக்கம், 53, ரவி, 50, முருகன், 46. இவர்களுக்கு-ரிய நிலத்தை தனித்தனியே பாகம்
பிரித்துக்கொண்டனர். இதில் மாணிக்கத்துக்கு சொந்தமான நிலத்-தையும், சூரமங்கலத்தில் வசிக்கும் ரவி பயன்படுத்தி வந்-துள்ளார்.
இதுகுறித்து ரவியிடம், முருகன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக நேற்று தகராறு நடந்தது. இந்நிலையில் இரவு, 'போதை'யில் கொல்லப்பட்டிக்கு சென்ற ரவி, முருகனிடம் வாக்-குவாதம் செய்துள்ளார்.
தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த ரவி,
கத்தியால் முருகனை குத்தினார். இதில்
முருகன் சம்பவ இடத்தில் பலியானார். இரும்பாலை போலீசார், சடலத்தை கைப்பற்றி, ரவியிடம் விசாரிக்கின்றனர்.
பள்ளத்தில் விழுந்த 'குடி'மகன் சாவு
இடைப்பாடி, அக். 20-
குமாரபாளையம், கல்லாங்காடுவலசை சேர்ந்தவர் மாதேஷ், 55. விசைத்தறி தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் தேவூர் அருகே புளியம்பட்டி ஆலமரம் பஸ் ஸ்டாப்புக்கு வந்தார்.
அங்கே மது அருந்திய அவர், அங்கிருந்த செல்லும்போது, போதையால் அருகே உள்ள பள்ளத்தில் தலைகவிழ்ந்து குப்புற விழுந்தார். நேற்று காலை வரை யாரும் பார்க்காத நிலையில் அங்-கேயே இறந்து கிடந்தார். உடலை கைப்பற்றி தேவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.