/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சிக்கு அழைப்பு
/
நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சிக்கு அழைப்பு
ADDED : ஜூலை 11, 2025 01:30 AM
பனமரத்துப்பட்டி, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கை:
சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், 'நாட்டுக்கோழி வளர்ப்பு' தலைப்பில், 26 நாட்களுக்கு, இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் கோழி வளர்ப்பு தீவனம் தயாரிப்பு, குஞ்சு பொரிப்பக மேலாண்மை, நோய் தடுப்பு முறை, விற்பனை வாய்ப்பு, மதிப்பு கூட்டுதல், வங்கியில் கடன் பெறும் வழிமுறைகள் குறித்து, வல்லுனர்கள் பயிற்சி அளிக்க உள்ளனர். பயிற்சி நாட்களில் விடுப்பு எடுக்காமல், காலை, 9:00 முதல், 5:00 மணி வரை பங்கேற்க வேண்டும். இதற்கு, 18 முதல், 35 வயது உள்ள, விருப்பம் உள்ள விவசாயிகள், இளைஞர்கள், பண்ணை மகளிர், தொழில் முனைவோர், 99401 78451 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
முதலில் வரும், 25 பயனாளிகளுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும்.