/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சீர்வரிசை வழங்கி திருமணம் விண்ணப்பிக்க அழைப்பு
/
சீர்வரிசை வழங்கி திருமணம் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூன் 18, 2025 01:50 AM
சேலம், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், முன்பதிவு செய்துள்ள மணமக்களுக்கு, வரும் ஜூலை, 2ல், இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட உள்ளது. இதுகுறித்து அறிவிப்பு பேனர், கோட்டை அழகிரிநாதர், சுகவனேஸ்வரர், கோட்டை பெரிய மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும், பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
அதில், 'ஏழை இந்து மக்கள் பயன்பெறும்படி, இலவச திருமணம் செய்து வைக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள், பெயர்களை உரிய ஆவணங்களுடன் கோவிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். திருமணத்தின்போது தம்பதியருக்கு, 4 கிராம் தங்கத்தில் திருமாங்கல்யம், மணமக்களுக்கான ஆடைகளுக்கு, 3,000 ரூபாய், இரு தரப்பிலும் உறவினர்கள், 20 பேருக்கு விருந்து, பூக்கள், பூஜை பொருட்கள் மட்டுமன்றி சீர்வரிசை பொருட்களாக பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், மிக்சி, சமையல் பாத்திரங்கள், இரண்டு கை கடிகாரங்கள் என, 70,000 மதிப்பில் திருமணம் செய்து வைக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.