/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தனிமனைகள் வரன்முறை விண்ணப்பிக்க அழைப்பு
/
தனிமனைகள் வரன்முறை விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 10, 2025 01:28 AM
சேலம், சேலம் மாவட்டத்தில், அனுமதியற்ற மனை பிரிவு களில், 2016 அக்., 20க்கு முன், தனி மனைகளாக வாங்கிய மக்கள் பயன்பெற, கடந்த ஜூலை, 1ல் இருந்து,  www.onlineppa.tn.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம்.
அனுமதியற்ற மனை பிரிவு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில், ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளில் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு எந்த மாற்றமின்றி, 2026 ஜூன், 30 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தில், www.tcponline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இதுபோன்று மலையிட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனை பிரிவுகளை வரன்முறைப்படுத்த, www.tnhillarealayoutreg.in  என்ற இணையத்துக்கு பதில், வரும் நவ., 30 வரை, www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

