/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
15ல் மாரத்தான் போட்டி இருபாலருக்கும் அழைப்பு
/
15ல் மாரத்தான் போட்டி இருபாலருக்கும் அழைப்பு
ADDED : நவ 13, 2025 01:26 AM
சேலம், சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் அறிக்கை: 'அண்ணா மாரத்தான்' போட்டி, வரும், 15 காலை, 6:00 மணிக்கு சேலம் காந்தி மைதானத்தில் தொடங்க உள்ளது. 17 முதல், 25 வயதுக்குட்பட்டோர், 25 வயதுக்கு மேற்பட்டோர் என, இரு பிரிவாக போட்டி நடக்க உள்ளது. 17 - 25 வயது ஆண்கள் பிரிவுக்கு, 8 கி.மீ., பெண்கள் பிரிவுக்கு, 5 கி.மீ., போட்டியும், 25 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவு ஆண்களுக்கு, 10 கி.மீ., பெண்களுக்கு, 5 கி.மீ., போட்டியும் நடத்தப்படும்.
இரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா, 5,000, 3,000, 2,000 ரூபாய், 4 முதல், 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா, 1,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் காந்தி மைதானத்தில் உள்ள, மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் ஆதார் அட்டை, மருத்துவ தகுதி சான்றிதழ், வயது சான்றிதழ், வங்கி கணக்கு புத்தக நகல்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

