/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கேஷியரை தாக்கிய சிறுவன் சிக்கினான்
/
கேஷியரை தாக்கிய சிறுவன் சிக்கினான்
ADDED : நவ 13, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் சுந்தர், 37. அதே பகுதியில் உள்ள பேக்கரியில் காசாளராக பணிபுரிகிறார். கடந்த, 9ல், அவர், கடையில் இருந்த போது அங்கு வந்த, 17 வயது சிறுவன், 'போதை'யில் சுந்தரிடம் பணம் கேட்டு மிரட்டினான்.
அவர் கொடுக்க மறுத்ததால், ஆத்திரமடைந்த சிறுவன், சுந்தரை தாக்கி, குளிர்பான பாட்டில்களை உடைத்து சேதப்படுத்தினான். இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசார், விசாரித்து நேற்று சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.

