/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பங்க் ஊழியரை வெட்டிய இளைஞர்களுக்கு 'காப்பு'
/
பங்க் ஊழியரை வெட்டிய இளைஞர்களுக்கு 'காப்பு'
ADDED : நவ 13, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், ஜாகீர் அம்மாபாளையம், விஜய
ராகவாச்சாரியார் தெருவை சேர்ந்தவர் விஜய், 27. புது ரோடு, சுந்தர் நகரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பணிபுரிகிறார். கடந்த, 9 இரவு, பெட்ரோல் அடிக்க வந்த இரு வாலிபர்களிடம் தகராறு ஏற்பட்டதில், ஒருவரை, விஜய் கையால் தாக்கினார். பின் அங்கிருந்து சென்ற இருவரும், அரை மணி நேரத்தில் திரும்ப வந்து, விஜயை கத்தியால் சரமாரியாக வெட்டினர். 7 இடங்களில் காயம் ஏற்பட்டு, அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, அய்யம்பெருமாம்பட்டியை சேர்ந்த சந்துரு, 22, திருமலைகிரியை சேர்ந்த நந்தகுமார், 22, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

