/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
127 மாணவர்களை அனுப்பாமல் மேலாண் குழு தலைவிக்கு எதிர்ப்பு
/
127 மாணவர்களை அனுப்பாமல் மேலாண் குழு தலைவிக்கு எதிர்ப்பு
127 மாணவர்களை அனுப்பாமல் மேலாண் குழு தலைவிக்கு எதிர்ப்பு
127 மாணவர்களை அனுப்பாமல் மேலாண் குழு தலைவிக்கு எதிர்ப்பு
ADDED : நவ 13, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்,தாரமங்கலம் அருகே அரியாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், 197 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரியராக மணிவண்ணன்(பொ) உள்பட, 5 ஆசிரியர்கள், 3 தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர். மேலாண் குழு தலைவியாக உள்ள நதியா, தற்காலிக
ஆசிரியராகவும் உள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலாண் குழுவினர், பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு, மாணவர்களின் 'டிசி' கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று ஆசிரியர்கள் வந்த நிலையில், 54 மாணவ, மாணவியர் மட்டும் பள்ளிக்கு வந்தனர். மற்ற, 127 மாணவர்களை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை.