ADDED : ஆக 07, 2025 01:42 AM
மேட்டூர், கொளத்துார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சரஸ்வதி அறிக்கை:
கொளத்துார் வட்டாரத்தில், 13 வருவாய் கிராமங்களில், 3,150 ெஹக்டேரில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இது, குறுகிய கால பயிர், பாசன நீர் குறைவாக உள்ள நிலங்களுக்கு ஏற்ற பயிர், கணிசமான மகசூல் தரும் பயிராக உள்ளது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், மக்காச்சோளம் செயல்விளக்க திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு, மானிய விலையில் மக்காச்சோள விதைகள், உயிர் உரங்கள், மண் வள மேம்பாட்டுக்கான இயற்கை இடுபொருட்கள், நானோ யூரியா ஆகியவை, கொளத்துார் வட்டார வேளாண்துறை சார்பில் வழங்கப்படுகிறது. இதில் பொது பிரிவுக்கு, 345 ெஹக்டேர், எஸ்.சி., பிரிவுக்கு, 80, எஸ்.டி., பிரிவுக்கு, 5 ெஹக்டேர் சாகுபடிக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. தேவைப்படும் விவசாயிகள் கொளத்துார் வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம்.