/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இருளில் நெடுஞ்சாலை விபத்துக்கு வழிவகுப்பு
/
இருளில் நெடுஞ்சாலை விபத்துக்கு வழிவகுப்பு
ADDED : ஆக 07, 2025 01:41 AM
பனமரத்துப்பட்டி, சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், சீலநாயக்கன்பட்டி பைபாஸ் முதல் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வரை, பிரதான சாலை நடுவே மின் கம்பம் உள்ளது. சமீபத்தில் தாசநாயக்கன்பட்டியில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதில் சாலை நடுவே புதிதாக மின் கம்பங்கள் பொருத்தி, விளக்கை எரியவிட்டனர்.
இதனால் இரவிலும் மேம்பாலம், 'பளிச்' என மின்னுகிறது. ஆனால் மேம்பால எல்லையில் இருந்து கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வரை, சாலையின் நடுவே உள்ள ஏராளமான பழைய மின் கம்பங்களில் விளக்குகள் எரியவில்லை. பிரதான சாலையில் இருள் சூழ்ந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இரவில் நெடுஞ்சாலையை கடக்க முயற்சிக்கும் பாதசாரிகள், விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது. அதனால் மின் விளக்குகளை எரிய விட, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.