/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மிகவும் பிற்படுத்தப்பட்ட விடுதியில் சேர மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு
/
மிகவும் பிற்படுத்தப்பட்ட விடுதியில் சேர மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு
மிகவும் பிற்படுத்தப்பட்ட விடுதியில் சேர மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு
மிகவும் பிற்படுத்தப்பட்ட விடுதியில் சேர மாணவ, மாணவியர்களுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 11, 2025 02:34 AM
சேலம், சேலம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபின மாணவ, மாணவியர்களுக்கு, 37 பள்ளி விடுதிகள், கல்லுாரி மாணவருக்கு, 5, மாணவியருக்கு 6 என, 48 விடுதிகள் செயல்படுகின்றன. பள்ளி விடுதியில், 4 முதல், பிளஸ் 2 வரை மாணவ, மாணவியர், கல்லுாரி விடுதியில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்போர் சேர தகுதி பெற்றவர்.
எந்த செலவின்றி, 3 வேளை உணவுடன் விடுதியில் தங்கும் வசதி உள்ளது. 10ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடை தைத்து வழங்கப்படும். அதேபோல், 10, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியரின் கல்வித்திறனை மேம்படுத்த, நீட், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கான வினா வங்கி நுால், சிறப்பு வழிகாட்டி நடத்தப்படும்.
கல்லுாரி விடுதியில் ஜமக்காளம், பள்ளி விடுதியில் பாய், ஆண்டுதோறும் வழங்கப்படும். அனைவருக்கும், இரு ஆண்டுக்கு ஒருமுறை போர்வை உண்டு. பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருவாய், 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலைய தொலைவு, 8 கி.மீ.,க்கு மேல் இருக்க வேண்டும். துார விதி மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய மாணவ,மாணவியர், விடுதி காப்பாளர் அல்லது கலெக்டர் அலுவலகம் அறை எண்: 110ல் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பத்தை இலவசமாக பெற்று, பூர்த்தி செய்த பின், பள்ளி விடுதிக்கு வரும், 18க்குள் ஒப்படைக்க வேண்டும். கல்லுாரி விடுதிக்கு வரும் ஜூலை, 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.