sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விதிமீறி ஏலம் அறிவிப்பு:எம்.எல்.ஏ., புகாரால் கமிஷனர் ஒத்திவைப்பு

/

விதிமீறி ஏலம் அறிவிப்பு:எம்.எல்.ஏ., புகாரால் கமிஷனர் ஒத்திவைப்பு

விதிமீறி ஏலம் அறிவிப்பு:எம்.எல்.ஏ., புகாரால் கமிஷனர் ஒத்திவைப்பு

விதிமீறி ஏலம் அறிவிப்பு:எம்.எல்.ஏ., புகாரால் கமிஷனர் ஒத்திவைப்பு


ADDED : மார் 08, 2024 03:00 AM

Google News

ADDED : மார் 08, 2024 03:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்;ஆத்துார் நகராட்சி ராணிப்பேட்டை, கடைத்தெருவில் உள்ள அண்ணா பவள விழா கட்டத்தில், 4 கடைகள்; நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, 2,000 சதுரடி கட்டடம்; புதுப்பேட்டை வாரச்சந்தையில், 16 கடைகள்; புதுப்பேட்டை மீன் மார்க்கெட் உள்பட, 18 கடைகள்; புது பஸ் ஸ்டாண்டில், 38 கடைகள் என, 7 பிரிவாக இன்று ஏலம் நடக்கவிருந்தது.

நகராட்சிக்கு சொந்தமான கடைகள், மாத உரிமத்தை அனுபவித்துக்கொள்ளும்படி மறு ஏலம் நடக்கிறது. இதற்கான ஒப்பந்த புள்ளி முன்வைப்பு தொகை, நேற்று மாலை, 4:30 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில் கொடுத்து ஏலத்தில் பங்கேற்பதற்கான அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள, நகராட்சி கமிஷனர் சையதுமுஸ்தபாகமால் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு, பிப்., 19ல் குறிப்பிட்டு, இரு நாட்களுக்கு முன் ஒப்பந்ததாரர்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கியதாக புகார் எழுந்தது. முன் அறிவிப்பு இல்லாமல் ரகசியமாக, இந்த கடைகளுக்கு ஏலம் நடத்துவதாக, சேலம் கலெக்டர் பிருந்தாதேவியிடம், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் புகார் கூறினார். இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி, சேலம் நகராட்சி நிர்வாக அலுவலர்கள் விசாரித்தனர். பின் இன்று நடக்கவிருந்த ஏலம், நிர்வாக காரணத்தால் ஒத்தி வைக்கப்படுகிறது என, நகராட்சி கமிஷனர், அறிவிப்பு பலகையில் ஒட்டினார்.

இதுகுறித்து, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் கூறுகையில், 'ஏல அறிவிப்புக்கு முன், நாளிதழில் விளம்பரம் கொடுத்து, அதற்கான விபரங்களை அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும். ஆனால் ஆளுங்கட்சியினருக்கு, கடைகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்வதற்கு ஏலம் நடத்துவது தெரியவந்ததால், கலெக்டரிடம் புகார் கூறினேன். அவர் விசாரித்து ஏலத்தை நிறுத்தும்படி உத்தரவிட்டார்,'' என்றார்.

100க்கும் மேற்பட்ட போலீஸ் குவித்து

கழிவுநீர் சுத்திகரிப்பு பணி தொடக்கம்

மகுடஞ்சாவடி, மார்ச் 8-

இடங்கணசாலை அருகே சின்ன ஏரியில் மின்மயானம், திடக்கழிவு மேலாண் கூடம், கோவில்கள் உள்ளன. அந்த ஏரியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 8.80 கோடி ரூபாய் ஒதுக்கி, பணி தொடங்க ஆயத்தம் நடந்தது. ஆனால் சில மாதங்களாக அப்பகுதி மக்கள், பல்வேறு போராட்டங்களை நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சில நாட்களுக்கு முன் ஏரியில் குப்பையை அகற்ற முயன்றபோது, மக்கள் லாரியை சிறைபிடித்தனர். இதனால், 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் நேற்று பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் போராட்டம் நடக்கும் என கருதி, ஏ.டி.எஸ்.பி., கண்ணன் தலைமையில் சங்ககிரி டி.எஸ்.பி.,ராஜா, மகுடஞ்சாவடி, சங்ககிரி, கொங்கணாபுரம், ஓமலுார், தாரமங்கலம், ஓமலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். மேலும் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வீரர்களும் குவிக்கப்பட்டனர். ஆனால் போலீசார் எதிர்பார்த்தபடி எந்த போராட்டத்தையும் மக்கள் நடத்தவில்லை. தொடர்ந்து கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கியது.






      Dinamalar
      Follow us