/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊராட்சி திட்டப்பணிகளில் முறைகேடு? லஞ்ச ஒழிப்பு, மக்கள் குறைதீர் அலுவலர் விசாரணை
/
ஊராட்சி திட்டப்பணிகளில் முறைகேடு? லஞ்ச ஒழிப்பு, மக்கள் குறைதீர் அலுவலர் விசாரணை
ஊராட்சி திட்டப்பணிகளில் முறைகேடு? லஞ்ச ஒழிப்பு, மக்கள் குறைதீர் அலுவலர் விசாரணை
ஊராட்சி திட்டப்பணிகளில் முறைகேடு? லஞ்ச ஒழிப்பு, மக்கள் குறைதீர் அலுவலர் விசாரணை
ADDED : செப் 22, 2024 04:32 AM
தலைவாசல்: ஊராட்சி திட்டப்பணிகளில் முறைகேடு புகார் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார், மாவட்ட மக்கள் குறைதீர் அலுவலர் விசாரணை நடத்தினர்.
தலைவாசல் அருகே சாத்தப்பாடி ஊராட்சியில் குளம் அமைக்கும் பணி, அரசு தொடக்கப் பள்ளி சுற்றுச்சுவர், மைதானம் உள்பட பல திட்டங்களில் பணிகள் மேற்கொள்ளாமல் முறைகேடு நடந்ததாக, கிராம மக்கள் கடந்த ஆகஸ்டில், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தமிழக முதல்வரின் தனி பிரிவு உள்ளிட்ட அலுவலர்களுக்கு மனு அளித்தனர். இதுதொடர்பாக நேற்று முன்தினம் சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சாத்தப்பாடியில் விசாரித்தனர். தொடர்ந்து நேற்று, சேலம் மாவட்ட மக்கள் குறைதீர் அலுவலர் காந்திமதி, ஊரக வளர்ச்சித்துறை திட்டப்பணிகள், முறைகேடு புகார் தொடர்பாக ஆய்வு செய்து விசாரித்தார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், 'வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு தபால் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெற்றதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
தலைவாசல் பி.டி.ஓ., இளங்கோ(கி.ஊ.,) கூறியதாவது:
தேசிய ஊரக வேலை திட்டத்தில் குளம் சீரமைப்புக்கு, 9 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அங்குள்ள ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தை சீரமைக்க விடாததால், டெங்கு பரவல் தடுப்பு பணியாக மேற்கொண்டனர். ஊரக வேலை திட்ட தொழிலாளர்களுக்கு அதற்கான கூலி வழங்கப்பட்டது.
பள்ளி சுற்றுச்சுவர் பணிக்கு பூஜை போடப்பட்டு பணி மேற்கொள்ள தாமதமானதால் நிறுத்தப்பட்டது. அதேபோல் மைதான தரைத்தள பணியும் நிதியின்றி நிறுத்தப்பட்டது. உள்ளூரை சேர்ந்த சிலர் காழ்ப்புணர்ச்சியில் புகார் அனுப்பியுள்ளனர். அதிகாரிகள் விசாரித்தனர். தவறு கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.