/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மருத்துவ பிரதிநிதி மாயம் கடன் தொல்லை காரணம்?
/
மருத்துவ பிரதிநிதி மாயம் கடன் தொல்லை காரணம்?
ADDED : செப் 27, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் சேலம், அரிசிபாளையம், சின்னப்பன் தெருவை சேர்ந்தவர் ஜவஹர், 35. ஆயுர்வேத நிறுவனத்தில், மருத்துவ பிரதிநிதியாக உள்ளார். இவர் வங்கி மூலமும், தெரிந்த நபர்களிடமும் கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலையில், கடன் கொடுத்தவர்கள் கேட்டு வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம், 14ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜவஹர், மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், அவரது மொபைல் போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது மனைவி வள்ளி நேற்று அளித்த புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.