தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/தாமதமின்றி விதைப்பு பணி மேற்கொள்ள அறிவுரை

தாமதமின்றி விதைப்பு பணி மேற்கொள்ள அறிவுரை

தாமதமின்றி விதைப்பு பணி மேற்கொள்ள அறிவுரை


ADDED : அக் 02, 2026 03:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 03:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பனமரத்துப்பட்டி: சேலம் மாவட்ட வேளாண் வானிலை மையம், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன் அறிக்கை:

சேலம் மாவட்டத்தில் வரும், 4 வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பம், 25 முதல், 35 டிகிரி செல்ஷியஸ் காணப்படும். தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 6 முதல், 10 கி.மீ., வேகத்தில் காற்று வீசும். காற்றின் ஈரப்பதம், 70 முதல், 90 சதவீதம் இருக்கும். தற்போது பெய்த மழையால்,

மண்ணில் போதிய ஈரப்பதம் உள்ளது. விவசாயிகள் தாமதமின்றி விதைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.புரட்டாசி பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற மக்காச்ச-சோளம், கேழ்வரகு, கம்பு, உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை, எள், ஆமணக்கு ஆகியவற்றில், விரும்பும் பயிர் ரகங்களின் சான்று நிலை விதைகளை தேர்வு செய்து விதைக்கலாம். தமிழக வேளாண் பல்கலையின், 'விதை அமிர்தம்' பயன்படுத்தி, விதை நேர்த்தி செய்த பின் விதைக்க வேண்டும்.

தற்போது நிலவும் மாறுபட்ட காலநிலையில், தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற காய்கறி பயிர்களில், காய்ப்புழு தாக்-குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை கட்டுப்படுத்த, முன்னெச்ச-ரிக்கை நடவடிக்கையாக, ஏக்கருக்கு, 5 எண்ணிக்கையில் இனக்க-வர்ச்சி பொறிகளை வைத்து தாய் அந்துப்பூச்சி செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். சேதம் அதிகமானால் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தலாம்.

மேலும் மழையை பயன்படுத்தி, சோளம், உளுந்து, பாசிப்ப-யிறு மற்றும் காய்கறி பயிர்களில் மேலுரம் போட்டு மண் அணைக்க வேண்டும். மித மழையை பயன்படுத்தி, ஓராண்டுக்கு ஒரு பாக்கு மரத்துக்கு, 10 முதல், 15 கிலோ மட்கிய தொழு உரம், 217 கிராம் யூரியா, 250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 234 கிராம் மியூரேட் ஆப் பொட்டாஷ் இட வேண்டும். இதை இரு சம பாக-மாக பிரித்து, 6 மாத இடைவெளியில் செடியை சுற்றி, 2 முதல், 3 அடி தள்ளி, வட்ட வடிவ குழியில் இடவேண்டும். இதில், 5 வய-துக்கு உட்பட்ட பாக்கு மரத்துக்கு, 50 சதவீதம் இட வேண்டும்.

மானிய விலையில்

மக்காச்சோள விதை

தலைவாசல் வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் அறிக்கை:

தமிழக அரசின் வேளாண் துறை மூலம் தேசிய உணவு பாது-காப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் திட்டத்தில், மக்காச்சோள செயல் விளக்கத்திடல் அமைக்கும் விவசாயிகளுக்கு மானிய விலையில், 'அட்வென்டா 752, டிசிஹெச் 206 ஆகிய வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள், உயிர் உரங்கள் மற்றும் நுண்-ணுாட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்காச்சோளம் சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள், தலைவாசல் வேளாண் விரிவாக்க மையம் அல்லது தங்கள் பகுதி வேளாண் அலுவலர்களை அணு-கலாம். தேவையான விதைகளை பெற, விவசாயிகள், ஆதார் அட்டை நகல் மற்றும் கணினி சிட்டாவை சமர்ப்பித்து பெற்றுக்-கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us