ADDED : அக் 02, 2026 03:24 AM
அ நிறம் | அளவு
ஏற்காடு: சர்வதேச காபி தினத்தை ஒட்டி, ஏற்காடு காபி வாரியம் சார்பில் ஒண்டிக்கடை ரவுண்டானாவில், இலவசமாக பில்டர் காபி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
வாரியத்தின் மூத்த தொடர்பு அலுவலர் பிரபு கவுடா தலைமை வகித்தார். அ.தி.மு.க.,வின், ஏற்காடு தொகுதி, எம்.எல்.ஏ., உஷா-ராணி, சுற்றுலா பயணியருக்கு இலவசமாக பில்டர் காபி கொடுத்து தொடங்கி வைத்தார்.காபி வாரியத்தின், போடிநாயக்கனுார் தமிழக மண்டல துணை இயக்குனர் சக்தி, ஏற்காடு காபி வாரிய உதவி விரிவாக்க அலு-வலர் நித்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து அப்பகு-தியில் கூடியிருந்த ஏராளமான சுற்றுலா பயணியர், மக்களுக்கு இலவசமாக பில்டர் காபி வழங்கப்பட்டதால் அருந்தி சென்றனர்.
