/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம்
/
சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம்
சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம்
சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம்
ADDED : நவ 10, 2024 01:32 AM
சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள்
சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம்
ஆத்துார், நவ. 10-
ஆத்துார், அரசநத்தத்தை சேர்ந்த காந்திமதி, சடையம்மாள், மஞ்சினி மருதாம்பாள், தென்னங்குடிபாளையத்தை சேர்ந்த, ஆத்துார் வட்டார காங்., செயலர் சுந்தரம் உள்ளிட்டோர், கடந்த, 4ல், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில், இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்லம், சாக்கடை அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.
அதன் மீது மனு எண் குறிப்பிட்டு, 'சீல்' வைத்து ஆத்துார் ஒன்றிய பி.டி.ஓ.,க்கு(கி.ஊ.,) பரிந்துரை செய்யப்பட்டது.
இவர்களது மனுக்கள் உள்பட, 10க்கும் மேற்பட்ட மனுக்கள், கடந்த, 6ல், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள குப்பையில் கிடந்தது. இதைப்பார்த்த, சின்னசேலத்தை சேர்ந்த வீராசாமி என்பவர், மனுவில் உள்ள போன் நெம்பருக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார். தொடர்ந்து அவற்றை தபால் மூலம் அனுப்பியுள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுக்கள், வேறு மாவட்டத்தில் உள்ள பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்தது கண்டு
மனுதாரர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதை அறிந்த சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, விசாரணை செய்ய உத்தரவிட்டார். ஆத்துார் தாசில்தார் பாலாஜி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து அரசநத்தம், மஞ்சினி, தென்னங்குடிபாளையத்தை சேர்ந்தவர்கள் கூறியதாவது:
கலெக்டரிடம் கொடுத்த மனுக்கள், ஆத்துார் ஒன்றிய பி.டி.ஓ.,விடம் இருக்க வேண்டும். 'சீல்' வைத்த மனுக்கள், இரு நாளில் குப்பைக்கு சென்றது எப்படி என தெரியவில்லை. இதுதொடர்பாக முதல்வருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளோம். நவ., 11ல், சேலம் கலெக்டரிடம், குப்பையில் இருந்து மீட்கப்பட்ட மனுக்களை வழங்க உள்ளோம். குப்பையில் மனுவை வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஆத்துார் பி.டி.ஓ., பரமசிவம்(கி.ஊ.,) கூறுகையில், ''ஆத்துாரை சேர்ந்தவர்களது மனுக்கள், சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கிடந்தது எப்படி என தெரியவில்லை. 'சீல்' வைத்த மனுக்கள் வேறு மாவட்டத்தில் கிடந்தது குறித்து விசாரிக்கிறோம்,'' என்றார்.