/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோரிக்கை அட்டை அணிந்து ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
/
கோரிக்கை அட்டை அணிந்து ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 17, 2025 02:18 AM
மேட்டூர், தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், மேட்டூர் தாலுகா அலுவலகம் அருகே, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், 2003க்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்தல்; அரசு துறைகளில் காலியாக உள்ள, 30 சதவீத பணியிடங்களை நிரப்புதல் உள்பட, பல்வேறு
கோரிக்கை வலியுறுத்தினர். பலரும், கோரிக்கை அட்டை அணிந்து பங்கேற்றனர். ஏற்பாடுகளை மேட்டூர் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிங்கராயன், செல்வராஜ் செய்திருந்தனர்.அதேபோல் ஆத்துார் தாலுகா அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகவேள் தலைமை வகித்தார். கோரிக்கை அட்டை அணிந்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்தல் உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.அரசு ஊழியர் சங்க கெங்கவல்லி கிளை செயலர் செல்வகுமார், நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.