/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொதுத்தேர்வில் மாணவர்கள் அபாரம் ஜெய் கல்வி குழும சேர்மன் பாராட்டு
/
பொதுத்தேர்வில் மாணவர்கள் அபாரம் ஜெய் கல்வி குழும சேர்மன் பாராட்டு
பொதுத்தேர்வில் மாணவர்கள் அபாரம் ஜெய் கல்வி குழும சேர்மன் பாராட்டு
பொதுத்தேர்வில் மாணவர்கள் அபாரம் ஜெய் கல்வி குழும சேர்மன் பாராட்டு
ADDED : மே 18, 2025 05:34 AM
சேலம்: சேலம், வாய்க்கால்பட்டறை ஜெய் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில், சிறப்பான தேர்ச்சியை பெற்றுள்ளனர். குறிப்பாக பிளஸ் 2 மாணவர் ஸ்ரீநிஷாந்த், 600க்கு, 585 மதிப்பெண்கள் பெற்றார். 10ம் வகுப்பு மாணவர் ரக் ஷன், 500க்கு, 480 மதிப்பெண்கள் பெற்றார்.
கிச்சிப்பாளையம் கிளையில், இலக்கியா, 500க்கு, 477, ஆப்ரின், 477 மதிப்பெண்கள் பெற்றனர். மேலும், 10ம் வகுப்பில், 450 மதிப்பெண்களுக்கு மேல், 16 மாணவர்கள், 400க்கு மேல், 58 மாணவர்கள் பெற்று, 100 சதவீத தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர். 10, பிளஸ் 2 பொதுத்தேர்வு களில், முதலிடம் பிடித்த மாணவர்களை, ஜெய் கல்வி குழும சேர்மன் சுப்பையா, இயக்குனர் ஜெய்முருகன், நிர்வாக இயக்குனர் அனிதா, முதல்வர்கள் செந்தில்குமார், பாலாமணி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டி, பரிசு வழங்கினர்.