/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜெய் ஜவான் ஜெய் கிஷான் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
ஜெய் ஜவான் ஜெய் கிஷான் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 19, 2025 01:35 AM
சேலம்,உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்த மனுக்கள் மீது, நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஜெய் ஜவான் ஜெய் கிஷான் மஸ்துார் பெடரேசன் கூட்டு அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சேலம் கோட்டை மைதானத்தில், ஜெய் ஜவான் ஜெய் கிஷான் மஸ்துார் பெடரேசன் கூட்டு அமைப்பு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிற்சங்க நிர்வாகி பாலு பேசியதாவது: ''மாவட்டம் முழுவதும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார்கள் மூலம் வழங்கப்படும் முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்டோர், ஆதரவற்றோர், விதவை உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி உதவித்தொகை கேட்டு மனு கொடுத்து பல மாதங்களாகி விட்டது. அவற்றை ஆய்வு செய்து உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு, 3,000 ரூபாய் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
மாநில துணைத்தலைவர் ரங்கநாதன், மாவட்ட தலைவர் வேலாயுதம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்