/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊரக திறனாய்வு தேர்வில் ஜலகை மகளிர் பள்ளி அசத்தல்
/
ஊரக திறனாய்வு தேர்வில் ஜலகை மகளிர் பள்ளி அசத்தல்
ADDED : ஏப் 24, 2025 01:14 AM
சேலம்:
தமிழகத்தில் ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியருக்கு, ஆண்டுதோறும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. இதில் மாவட்டத்துக்கு, 50 மாணவர், 50 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, 9 முதல், பிளஸ் 2 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டு தேர்வு பிப்ரவரியில் நடந்தது. அதன் முடிவு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது.
அதில் சேலம் மாவட்டத்தில் தகுதி பெற்ற, 50 மாணவர்கள், 50 மாணவியர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜலகண்டாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, 16 மாணவியர் இடம் பிடித்துள்ளனர். ஒரே பள்ளியில், 16 பேர் தகுதி பெற்றதால், தலைமை ஆசிரியர், பயிற்சி ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

