/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜல்லிக்கட்டு போட்டிமுன்னேற்பாடு தீவிரம்
/
ஜல்லிக்கட்டு போட்டிமுன்னேற்பாடு தீவிரம்
ADDED : ஜன 05, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜல்லிக்கட்டு போட்டிமுன்னேற்பாடு தீவிரம்
எருமப்பட்டி,: எருமப்பட்டியில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை யையொட்டி, ஊர் பொது மக்கள் சார்பில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதே போல், இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக பொதுமக்கள் சார்பில், கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், எருமப்பட்டி டவுன் பஞ்., கருப்பணார் கோவில் அருகே ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி, நேற்று மைதானத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடந்தது.