/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தம்மம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு
/
தம்மம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு
ADDED : மே 28, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார் ;ஆத்துார் அடுத்த, தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த, கடந்த ஏப்ரலில் வாடிவாசல், காளை வரும் பாதை அமைத்தனர். ஆனால் விழா அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அரசாணை வழங்கியுள்ளது.
இதனால், 400 காளைகள், 200 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். நேற்று ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் அலுவலர்கள், ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இன்று காலை, 8:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை, ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படும் என, விழா குழுவினர் தெரிவித்தனர்.