/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு; 435 காளைகள், 300 வீரர்கள் பதிவு
/
கூலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு; 435 காளைகள், 300 வீரர்கள் பதிவு
கூலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு; 435 காளைகள், 300 வீரர்கள் பதிவு
கூலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு; 435 காளைகள், 300 வீரர்கள் பதிவு
ADDED : ஜன 17, 2025 06:17 AM
ஆத்துார்: பொங்கல் பண்டிகையையொட்டி, சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கூலமேட்டில், இன்று ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடு குறித்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்க, 435 காளைகளின் உரிமையாளர்கள், 300 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர். வாடிவாசல், தடுப்பு வேலி, பாதுகாப்பு வசதிகள், பார்வையாளர் அமரும் இடம், மேடைகள், காளை வரும் பாதைகள் பார்வையிடப்பட்டன. வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். பரிசோதனை செய்த காளைகள் மட்டும் அனுமதிக்கப்படும். காளை காயம் அடைந்தால் சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சர் பங்கேற்பு
ஜல்லிக்கட்டு விழாவை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைக்கிறார். சிறந்த காளை கள், மாடுபிடி வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகின்றன என, விழா குழுவினர் தெரிவித்தனர்.