/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று துவங்கி ஜூன் 26 வரை மேட்டூர் வட்டத்தில் ஜமாபந்தி
/
இன்று துவங்கி ஜூன் 26 வரை மேட்டூர் வட்டத்தில் ஜமாபந்தி
இன்று துவங்கி ஜூன் 26 வரை மேட்டூர் வட்டத்தில் ஜமாபந்தி
இன்று துவங்கி ஜூன் 26 வரை மேட்டூர் வட்டத்தில் ஜமாபந்தி
ADDED : ஜூன் 18, 2024 07:11 AM
மேட்டூர் : மேட்டூர் வட்ட அலுவலகத்தில் இன்று துவங்கி வரும், 26 வரை ஜமாபந்தி நடக்கிறது.மேட்டூர் வட்டத்தில் மொத்தம், 49 வருவாய் கிராமங்கள் உள்ளன.
மேட்டூர் வட்டத்தில் இன்று சேலம் உதவி ஆணையர் (கலால்) தலைமையில் ஜமாபந்தி துவங்குகிறது. முதல் நாளான இன்று கொளத்துார் குறுவட்டத்துக்கு உட்பட்ட, வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது. நாளை மேட்டூர் குறுவட்ட வருவாய் கிராமங்களுக்கும், ஜூன் 20ல் பொட்டனேரி குறுவட்டம், பாலமலை குறுவட்டத்துக்கு ஜமாபந்தி நடக்கிறது.ஜூன், 21ல் மேச்சேரி குறுவட்டத்திலுள்ள, 13 வருவாய் கிராமங்களில், ஆறு கிராமங்களுக்கும், 25ல், 7 கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது. 26ல் நங்கவள்ளி குறுவட்டத்தில், 11 வருவாய் கிராமங்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.