ADDED : டிச 06, 2025 06:34 AM

சேலம்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 9ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சேலம், அண்ணா பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி, மாநகர அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்தது.
முன்னதாக, 4 ரோட்டில் இருந்து, மாவட்ட செயலர் பாலு, அமைப்பு செயலர் சிங்காரம் தலை-மையில் ஊர்வலமாக வந்த கட்சியினர், மணி மண்டபத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியன், கொள்கை பரப்பு செயலர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பொருளாளர் வெங்கடாஜலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
ஓமலுாரில், ஓமலுார் எம்.எல்.ஏ., மணி தலைமையில் கட்சி-யினர், ஜெயலலிதா படத்துக்கு மலர்கள் துாவி அஞ்சலி செலுத்-தினர். முன்னாள் எம்.எல்.ஏ., வெற்றிவேல், ஜெ., பேரவை மாநில துணை செயலர் விக்னேஷ், ஒன்றிய செயலர்கள் ராஜேந்-திரன், செந்தில்குமார், விமல்ராஜ், நகர செயலர் சரவணன் உள்-ளிட்ட
நிர்வாகிகள் பங்கேற்றனர். அதேபோல் காருவள்ளியில் உள்ள ஜெயலலிதாவின் ஆளுயர சிலைக்கு, கட்சியினர் மாலை அணி-வித்தனர். காடையாம்பட்டியில் ஒன்றிய செயலர்கள் சித்தேஸ்-வரன், சுப்ரமணியம் தலைமையில் கட்சியினர், ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
தாரமங்கலத்தில், நகர அ.தி.மு.க., சார்பில், ஒன்றிய செயலர் காங்-கேயன், நகர செயலர் பாலசுப்ரமணியம் தலைமையில் கட்சி-யினர், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். நகர அவைத்தலைவர் துரைராஜன், மாவட்ட, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

