/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகைக்கடைக்காரர் கல்லால் தாக்கி கொலை
/
நகைக்கடைக்காரர் கல்லால் தாக்கி கொலை
ADDED : ஆக 28, 2025 02:13 AM
காரிப்பட்டி:சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் அடுத்த சுக்கம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ், 35. உடையாப்பட்டியில் நகை கடை வைத்திருந்தார். இவருக்கு மனைவி நித்யா மற்றும் இரு பெண் குழந்தைகள், ஆண் குழந்தை உள்ளனர்.
நேற்று மதியம், 3:00 மணிக்கு, குள்ளம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே, ரமேஷ் மது அருந்திக்கொண்டிருந்த நிலையில், மர்ம நபரால் கல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து காரிப்பட்டி போலீசார் விசாரித்தனர்.
போலீசார் கூறுகையில், ' ரமேஷ், நண்பருடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, கல்லால் தாக்கப்பட்ட நிலையில், அவர் உயிருக்கு போராடினார். உடனே, அவரது நண்பர் அவரை மீட்டு, ஆம்புலன்சில், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக, மின்னாம்பள்ளியை சேர்ந்த புருஷோத்தமன், 45, என்பவரிடம் விசாரணை நடக்கிறது' என்றனர்.