/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகை, வெள்ளி பொருட்களும் காணவில்லை பணம் திருடுபோன விவகாரத்தில் மீண்டும் புகார்

ADDED : ஜூலை 11, 2025 01:30 AM
சேலம் :சேலம், கருப்பூர் அருகே கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தனபால், 49. முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு கடந்த, 6ல் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரது மனைவி ஜெயந்தி, 45, தனபாலை அழைத்துக்கொண்டு, வீட்டை பூட்டி விட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். 7 காலை திரும்பி வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 5,000 திருடுபோனது தெரிந்தது.
அதேபோல் தனபால் வீட்டின் மாடியில் வசிக்கும், பெரியார் பல்கலை கவுரவ விரிவுரையாளர் ரகுநாத், 32, கோவை சென்றிருந்த நிலையில், அவரது வீட்டிலும், 5,000 ரூபாய் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அன்றே தனபால் புகார்படி, கருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜெயந்தி, மீண்டும் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'சம்பவ நாளில் பணம் மட்டும் திருடுபோனதாக தெரிவித்தனர். தற்போது நகைகள் காணவில்லை என தெரியவந்ததால், ஜெயந்தி புகார் அளித்தார். அதில், 3 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், 10,000 திருடுபோனதாக தெரிவித்துள்ளார். அதன்படி விசாரணை நடக்கிறது' என்றனர்.