/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகை, பைக் மீட்பு திருடியவருக்கு 'காப்பு'
/
நகை, பைக் மீட்பு திருடியவருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 30, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர், மேட்டூர், சமத்துவபுரம், சண்முக நகரில் வசிப்பவர், வினோத்குமார், 33. தனியார் நிறுவன பொறியாளர். இவரது வீட்டில் கடந்த, 25 நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, 10 பவுன் நகைகள், மடிக்கணினி, மொபைல் போன், 1,000 ரூபாயை திருடிச்சென்றனர்.
அதேபோல் அதே பகுதியை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் அரவிந்த், 31, வீடு முன் நிறுத்தியிருந்த பைக் திருடுபோனது. இருவரும் அளித்த புகார்படி, கருமலைக்கூடல் போலீசார் விசாரித்ததில், ஓமலுார், செல்லபிள்ளைகுட்டையை சேர்ந்த அய்யந்துரை, 62, இரு வீடுகளிலும் திருடியது தெரிந்தது. அவரிடம் நகை, மடிக்கணினி, மொபைல், பைக்கை மீட்ட போலீசார், நேற்று அவரை கைது செய்தனர்.