ADDED : ஜூன் 27, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் மீனா, 59. நெடுஞ்சாலை நகர், கோதாவரி தெருவில் உள்ள கிளினிக்கில் மருந்தாளுனராக உள்ளார்.
நேற்று முன்தினம் பணி முடிந்து, அமராவதி தெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவரில், ஒருவர் சாலையில் பின் தொடர்ந்து நடந்து வந்து, மீனா அணிந்திருந்த, 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு, பைக்கில் ஏறி தப்பினார். மீனா புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.