/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேளாண் இணை இயக்குனர் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
/
வேளாண் இணை இயக்குனர் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
ADDED : ஜூலை 24, 2025 01:54 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 50 ஹெக்டேரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. அதில் குறுவை தொகுப்பு திட்டத்தில், இயந்திரம் மூலம் பயிர் நடவு செய்வதற்கு ஏக்கருக்கு, 4,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சியில் விவசாயி கந்தசாமி தோட்டத்தில், இயந்திரம் மூலம் பயிர் நடவு செய்த வயலை, சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், நேற்று கள ஆய்வு செய்தார். பயிர் சாகுபடி தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அதேபோல் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், குதிரைவாலி விதைப்பண்ணை நாற்றங்கால் வயலை பார்வையிட்டு, தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார். பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள கிடங்கு, திட்ட ஆய்வு செய்து, அலுவலர்
களுக்கு ஆலோசனை வழங்கினார்.

