/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண் பரிசோதனை முக்கியத்துவம் இணை இயக்குனர் அறிவுரை
/
மண் பரிசோதனை முக்கியத்துவம் இணை இயக்குனர் அறிவுரை
ADDED : ஜூலை 10, 2025 01:38 AM
அ.பட்டணம்,  அயோத்தியாப்பட்டணம், ஏரிபுதுாரில், நடப்பாண்டுக்கு தேசிய சமையல் எண்ணெய் இயக்கம், வள மதிப்பு கூறு சங்கிலி தொகுப்பு திட்டத்தில், நிலக்கடலை வயல்களை, சேலம் வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன், நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது வேர் அழுகல், வாடல் நோய்களை கட்டுப்படுத்த, வேளாண் துறை மூலம் வழங்கப்படும், டிரைக்கோ டெர்மா விரிடி, ஒரு கிலோவுக்கு, 4 கிராம் வீதம், விதை நேர்த்தி செய்து விதைக்கும்படி விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, பயிர் மகசூல் அதிகரிக்க, மண்ணிலிருந்து செடிகளுக்கு கிடைக்கக்கூடிய சத்துக்களை கண்டறிய, மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார்.
பின், குப்பனுாரில் தரிசு நிலத்தொகுப்புகளை ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்ட செயல்பாடு குறித்து, மேட்டுப்பட்டி தாதனுாரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மத்திய, மாநில அரசின் திட்டங்களை விரைந்து முடிக்க, மேலாண் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். வேளாண் உதவி இயக்குனர் சண்முகப்பிரியா, வேளாண் அலுவலர் பிரியா உள்பட பலர் உடனிருந்தனர்.

