/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கட்டடம் புதுப்பிக்க லஞ்சம் இளநிலை உதவியாளர் கைது
/
கட்டடம் புதுப்பிக்க லஞ்சம் இளநிலை உதவியாளர் கைது
ADDED : ஆக 09, 2025 01:10 AM
சேலம், கட்டடம் புதுப்பிக்க, 15,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய இளநிலை உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
சேலம், சித்தனுாரை சேர்ந்த, கட்டட தொழிலாளி ஆறுமுகம். இவர், கட்டட தொழிலாளர் சங்கத்தை புதுப்பிக்க, சில நாட்களுக்கு முன் கோரிமேட்டில் உள்ள தொழிலாளர் நல அலுவலகத்துக்கு சென்று, அலுவலர்களை சந்தித்து பேசினார்.
அப்போது இளநிலை உதவியாளர் பாலமுருகன், 30, என்பவரை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி அவரை
சந்தித்து, சங்கத்தை புதுப்பிக்க கேட்டுள்ளார். அதற்கு அவர், 15,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர விரும்பாத ஆறுமுகம், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். தொடர்ந்து அவர்கள் கொடுத்த அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவிய, 15,000 ரூபாயை, நேற்று, தொழிலாளர் நல அலுவலகத்துக்கு சென்று, பாலமுருகனை சந்தித்தார்.
அப்போது அவர், 'பணி முடிந்து செல்லும் போது ஒரு இடம் சொல்கிறேன். அங்கு வந்து பணத்தை தாருங்கள்' என்றார்.
அதன்படி இரவு, ஆறுமுகத்தை தொடர்பு கொண்ட பாலமுருகன், சித்தனுார் பஸ் ஸ்டாப் பகுதிக்கு வந்து பணம் தர அறிவுறுத்தினார். அதன்படி ஆறுமுகம் சென்று, பாலமுருகனிடம், 15,000 ரூபாயை கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பால
முருகனை, கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.

