/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஜூனியர் சாப்ட் டென்னிஸ்: வீராங்கனை அசத்தல்
/
ஜூனியர் சாப்ட் டென்னிஸ்: வீராங்கனை அசத்தல்
ADDED : நவ 25, 2024 02:59 AM
ஓமலுார்: ஜூனியர் சாப்ட் டென்னிஸ், பெண்கள் தனி நபர் போட்டியில் சேலம் நிஷாலினி முதலிடம் பிடித்தார்.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தமிழக சாப்ட் டென்னிஸ் சங்கம் இணைந்து, 14வது, மாவட்ட ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியை, ஓமலுாரில் சாப்ட் டென்னிஸ் அகாடமி, இரும்பாலையில், ரெட்ெஷயின் சாப்ட் டென்னிஸ் அகாடமி ஆகிய இடங்களில் நேற்று நடத்தின. அதில், 20 பள்ளிகளில் இருந்து, 120 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.ஓமலுாரில் நடந்த இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவு தனி நபரில் ரிஷ்வந்த் முதலிடம், ஜெயசூர்யா இரண்டாமிடம், நிவாஸ், துர்கேஷ் மூன்றாமிடம் பிடித்தனர்.
இரட்டையர் பிரிவில் ஓமலுார் தனுஷ் அபினவ் - சந்தோஷ் முத-லிடம், ரிஷி - அக்ஷய் ஆனந்த் இரண்டாமிடம், ரிஷ்வந்த் - நிவாஸ், அக்ஷித் - துர்கேஷ் ஜோடிகள், 3ம் இடம் பிடித்தன. ஆண்கள் குழு போட்டியில் இரும்பாலை ரெட்ெஷயின் அணி முதலிடம், ஓமலுார் சாப்ட் டென்னிஸ் அணி இரண்டாமிடம், மேட்டூர், சேலம் அணிகள், 3ம் இடம் பெற்றன.
அதேபோல் பெண்கள் தனி நபர் போட்டியில் சேலம் நிஷாலினி முதலிடம், ஓமலுார் தனிகா இரண்டாமிடம், மேட்டூர் மகிதா, மிருதுளாஸ்ரீ மூன்றாமிடம் பெற்றனர். இரட்டையர் பிரிவில் மகிதா - மிருதுளாஸ்ரீ முதலிடம், தனிகா - ஸ்ருதிலயா இரண்டா-மிடம், வினுபிரஷா - ஓவியா, நிஷாலினி - ஷர்மதி ஜோடிகள், மூன்றாமிடம் பிடித்தனர்.
பெண்கள் குழு போட்டியில் ஓமலுார் சாப்ட் டென்னிஸ் அகா-டமி முதலிடம், இரும்பாலை ரெட்ெஷயின் அணி இரண்டா-மிடம், சேலம், மேட்டூர் அணிகள் மூன்றாமிடம் பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக சாப்ட் டென்னிஸ் அணி தலைவர் செந்தில்குமார் பரிசு வழங்கினார்