/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரோட்டரி ஹாலில் கலாஷேத்ரா கண்காட்சி
/
ரோட்டரி ஹாலில் கலாஷேத்ரா கண்காட்சி
ADDED : மார் 17, 2024 02:14 PM
சேலம்: சேலம், சகாதேவபுரம், விஜயராகவாச்சாரியார் ஹால் பின்புறம் உள்ள ரோட்டரி ஹாலில், கலாஷேத்ரா வழங்கும் மாபெரும் கைத்தறி பொருட்கள் கண்காட்சி, விற்பனை நடந்து வருகிறது.
இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளர் ஞானவேல் கூறியதாவது: கைத்தறி கைவினைப்பொருட்கள், நகைகள், ஆன்மிக பொருட்கள் கண்காட்சி, விற்பனையை, சேலம் மக்களுக்கு தொடங்கி உள்ளோம்.
இங்கு ஹேண்ட் லுாம் சாரீஸ், மதுரை சுங்குடி, ஒடிசா சம்பல்பூரி, பெங்கால் காட்டன் சாரீஸ், காஷ்மீர் சாரீஸ், இக்கட்டாப்ஸ், படோலா டாப்ஸ், லக்னோ சிக்கன் வொர்க் டாப்ஸ், காஷ்மீர் டாப்ஸ், ஜெய்ப்பூர், குஜராத், ஹரியானா மெத்தை விரிப்புகள், ஐம்பொன் நகைகள், கருங்காலி மாலை, ஸ்படிக மாலைகள் என, எண்ணற்ற பொருட்கள் கண்காட்சியில் கிடைக்கும். கைவினை கலைஞர்களின் நேரடி விற்பனையில், 10 முதல், 20 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

