ADDED : ஆக 22, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
ஆத்துார்; ஆத்துார், வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், தமிழ் துறை சார்பில் கவிஞர் கண்ணதாசன் நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் ரவீந்திரன் தலைமை வகித்து, கண்ணதாசன் எழுதிய கவிதை, புத்தகங்கள், சமுதாய சீர்திருத்த கருத்-துகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து கண்-ணதாசன் குறித்து, மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதை, வினாடி - வினா போட்-டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. துறை தலைவர் முருகேசன், மேட்டூர் தமிழ் சங்க தலைவர் பாரி உள்பட பலர் பங்கேற்றனர்.
