ADDED : ஆக 22, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்; தலைவாசல், புனல்வாசலில், 'அட்மா' திட்-டத்தில், ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமை வகித்தார். மக்காச்சோள சாகுபடியுடன் மண் புழு உரம் தயாரித்தல், மாடு, ஆடு, கோழி வளர்த்தல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, வரு-வாயை அதிகரிப்பது குறித்து, வேளாண் பயிற்சி-யாளர் பிரவீன் எடுத்துரைத்தார்.
மக்காச்சோள பயிரில் பூச்சி கட்டுப்படுத்தல், இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்தும் முறை, மண்புழு தயாரிப்பு தொழில்நுட்பம், நுண்ணீர் பாசன திட்டம், விவசாய அடையாள அட்டை பதிவு அவசியம், வறட்சி மேலாண்மை, மண்மா-திரி எடுப்பதன் அவசியம் குறித்து, வேளாண் அலுவலர்கள் எடுத்துரைத்தனர். துணை வேளாண் அலுவலர் மணவழகன், உதவி வேளாண் அலு-வலர் தமிழ்செல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.
