ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் பி.ஓ.எஸ்., ஒப்படைப்பு போராட்டம்
ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் பி.ஓ.எஸ்., ஒப்படைப்பு போராட்டம்
ADDED : ஆக 22, 2026 05:48 AM
சேலம்; சேலம் மாநகரில் உள்ள ரேஷன் கடைகளில் பணிபுரியும், 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அஸ்தம்பட்டியில் உள்ள தாலுகா அலுவலகத்-துக்கு நேற்று வந்தனர். அங்கிருந்த அதிகாரிக-ளிடம், பி.ஓ.எஸ்.,(பாயின்ட் ஆப் சேல்) கரு-வியை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நியாயவிலைக்-கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கணேசன் கூறியதாவது: ஒரு வாரமாக, பி.ஓ.எஸ்., கருவிக்கு இணையதள சேவை கிடைப்பதில்லை. இதனால் மக்களுக்கு பொருட்கள் வழங்க முடிய வில்லை. தினமும் காலை ஒரு மணிநேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே, இணையதள சர்வர் வேலை செய்கிறது. இதனால், 100 பில் போடும் கடையில், 40 பில் மட்டுமே போடப்படுகிறது. இப்பிரச்னையால், மக்களுக்கும் ஊழியர்க-ளுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும் இந்த மாத விற்பனையும் குறைந்துள்ளது. இதுகு-றித்து சங்கம் சார்பில் மனு அளித்தும் நடவ-டிக்கை இல்லை. இனியாவது இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
