/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தம்பி சீண்டியதை மறைத்த கராத்தே பயிற்சியாளருக்கு 'காப்பு'
/
தம்பி சீண்டியதை மறைத்த கராத்தே பயிற்சியாளருக்கு 'காப்பு'
தம்பி சீண்டியதை மறைத்த கராத்தே பயிற்சியாளருக்கு 'காப்பு'
தம்பி சீண்டியதை மறைத்த கராத்தே பயிற்சியாளருக்கு 'காப்பு'
ADDED : செப் 08, 2025 03:40 AM
சேலம்: 'தம்பி சில்மிஷம் செய்தததை யாரிடமும் சொல்லக்கூடாது' என, 9ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் விடுத்த கராத்தே பயிற்சியாளரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், சிவதாபுரம், பனங்காட்டை சேர்ந்தவர் விஜயகுமார், 40. கராத்தே பயிற்சியாளரான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில், பள்ளி மாணவ - மாணவியர் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கிறார்.
திருவாரூரில் நடந்த கராத்தே போட்டிக்கு, கடந்த 4ல் சில மாணவர்களை அழைச்செல்ல வேண்டி இருந்தது.
அதற்கு விஜயகுமாரின் தம்பியான, வெள்ளிப்பட்டறை தொழிலாளி கணேசனை அழைத்து செல்லும்படி கூறி, அனுப்பி வைத்தார்.
அழைத்துச்சென்றவர்களில் 14 வயதுடைய, 9ம் வகுப்பு மாணவியிடம், கணேசன் சில்மிஷம் செய்துள்ளார்.
இதுகுறித்து விஜயகுமாருக்கு தெரிய வர, அவர் சிறுமியிடம், 'யாரிடமும் சொல்லக்கூடாது' என மிரட்டியுள்ளார். அச்சம் அடைந்த சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்தார்.
பெற்றோர் புகார்படி, சூரமங்கலம் மகளிர் போலீசார் விசாரித்து, மிரட்டல் விடுத்து, தம்பியின் அத்துமீறலுக்கு உடந்தையாக இருந்ததாக, 'போக்சோ' சட்டத்தில் விஜயகுமாரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கணேசனை தேடுகின்றனர்.